அன்பிற்குரிய‌ த‌மிழ் பெரும‌க்க‌ளே, இத‌ன் மூல‌ம் பைபிளை ப‌ற்றி தெரிந்து கொள்வ‌துட‌ன் அனைவ‌ருக்கும் எடுத்துக் கூறுங்க‌ள்....

1. இத்தள‌த்தில் காட்ட‌ப்ப‌டும் மேற்கோள் பைபிள் வ‌ச‌ன‌ங்க‌ள் அனைத்தும் “பரிசுத்த வேதாகமம் தமிழில்” “HOLY BIBLE IN TAMIL LANGUAGE” http://www.tamil-bible.com/ என்னும் கிறிஸ்துவர்களின் அதிகாரப்பூர்வமான‌ த‌ள‌த்திலிருந்தே பெறப்பட்டிருக்கின்ற‌ன‌......

2. இவ்வ‌ளைத்த‌ள‌தில் உள்ள‌வை திரிப்பும் அல்ல‌. கிறிஸ்த‌வ‌ வெறுப்பும் அல்ல‌. 3.பெரும் பெரும்பான்மையான அப்பாவி கிறிஸ்துவ‌ர்களே அறியாத அப்பட்டமான உண்மைக‌ள்......


பதிவுகளை ஒவ்வொரு திரட்டிகளில் தினமும் சமர்ப்பிப்பது சிரமமாகவும் அதிக நேரச்சிலவும் ஆகின்றபடியால் வாசகர்கள் இந்த வலைப் பதிவு தளத்தின் url http://bibleunmaikal.blogspot.com/ ஐ தாங்களின் BOOKMARK FAVORITES ல் குறித்துக் கொண்டு தாங்களாகவே நேரடி DIRECT ஆக அடிக்கடி இவ் வளைத்தளத்திற்கு http://bibleunmaikal.blogspot.com/ வந்து படியுங்கள்....


**கண்ணில் கட்டிலடங்கா கருணையுடன் பால் வடியும் முகமாக ஊடகங்களிலும் சித்திரங்களிலும் சிலைக‌ளிலும் காட்சி த‌ரும் க‌ர்த்தரின் சொற்க‌ளான‌, கிறிஸ்துவத்தின் அடிப்படையான‌ பைபிள் என்ன‌ கூறுகிறது. ப‌டியுங்க‌ள்.**


ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 5 : 39) ** ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.** புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18 : 22 – 23. ல் இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.** ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்..

....இவ்வலைப்பூவில் உள்ள பதிவுகள் “புனித பைபிளில்” உள்ள சுலோகங்களை அப்ப‌டியே ஆதாரத்துடன் கொண்டுள்ளதால் எங்கள் மீது கோபம் கொண்டு தூஷிப்பவர்கள் “புனித பைபிளின்” மீது கோபம் கொண்டு “புனித பைபிளையே” தூஷிக்கிறார்கள் என்பதை உணருகின்றார்களா? மறந்து விட்டார்களா? கையிலேயே “புனித பைபிள்” இருக்குமே? அறிவுஜீவிகளே!!!இவ்வளைத்தளத்தை இல்லாமல் செய்துவிடலாம். இங்கு சுட்டிக்காட்டப்படும் "கர்த்தரின்" வார்த்தைகளான புனித பைபிள் ஸ்லோகங்களை உங்களால் இல்லாமல் செய்து விட முடியுமா? செய்வதும் ஆகுமா? சிந்தியுங்கள்.....


....புனித பைபிளின் நல்ல போதனைகளை பார்! படி! நல்ல போதனைகளை இத்தளத்தில் பதிவிடு! என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களே!!உங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள் . கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோ? புனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது? புனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வதில் தவறென்ன? பைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.....
.

Wednesday, August 4, 2010

ம‌த‌ம்மாற்ற‌ செய்ய‌ மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

இந்தியாவில் இந்து இயேசு.
புயலை எழுப்பும் புதிய பைபிள்.

இந்தியாவில் கிறித்துவத்தைப் பரப்ப ஏசுவை கண்ணணாகவும் பைபிளை கீதையாகவும் ஆக்கும் முயற்ச்சிகளில் தோல்வியும் தளர்ச்சியும் அடையப் பெற்று இப்பொழுது நடப்பில் ஏசு " அல்லா " ஆக ஆக்கப்பட்டு "பைபிள்" "ஈஸா குர் ஆன் " ஆக ஆக்கப்படும் முயற்ச்சி உலக முழுவதிலும் மலிந்து வருகிற‌து..

இதை இணைய தளங்களிலும் கண்கூடாக காண‌லாம்

கிறித்துவத்தைப் பரப்ப ஹிந்துகளிடம் ஏசு=“கிருஷ்ணன்" !!பைபிள்=”கீதை” !! என்றும் முஸ்லிம்களிடம் “அல்லா " = "கர்த்தர்" "இயேசு" “பைபிள் ="ஈஸா குர் ஆன் “ என்றும் த‌ங்க‌ள் ம‌த‌த்தை பற்றி சரியாக‌ அறிந்திராத பாம‌ர‌ ஹிந்து முஸ்லீம்க‌ளை மூளைச்ச‌ல‌வை செய்து கிறிஸ்துவ‌ர்க‌ளாக‌ ம‌த‌ மாற்ற‌ம் செய்து வ‌ருகிறார்க‌ள்.

கிறிஸ்துவ‌ த‌லைமை பீட‌மான‌ வ‌ட்டிக‌னிலிருந்தே போப்பாண்டவரின் ஆசியோடு  மாற்று பைபிளை த‌யாரித்து இந்துக்க‌ளை ம‌த‌ம் மாற்ற‌ ஆவ‌ண‌ செய்து வ‌ருகின்றார்க‌ள் என்றால் புரிந்து கொள்ளுங்க‌ள்.
PICTURE FROM KUMUDAM REPORTER 31.02.2008
புயலை எழுப்பும் புதிய பைபிள்.கொந்தளிக்கும் கிறிஸ்துவ அமைப்புகள்.

சிவன், கிருஷ்ணர் சிலைகளை தேவாலயத்தில் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

கத்தோலிக்க கிறிஸ்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது போப்பாண்டவரின் ஆசியோடு வெளியிடப்பட்டிருக்கும் புதிய பைபிள் ஒன்று.

இந்த ஒரு புத்தகத்தால் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களிடையே மதக் கலவரம் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாக, அவர்கள் அபயக் குரல் எழுப்புவது ஒட்டுமொத்த அதிர்வலையைக் கிளப்பியிருக்கிறது.

புதிய பைபிள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பின் தலைவர் ரபேலை சந்தித்துப் பேசினோம்.

"இந்து, முஸ்லிம் மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டு, நமது சமூகம் ஒற்றுமையாக இருக்கும் வகையில் அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரோமாபுரியில் நடந்த இரண்டாம் வாடிகன் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதையொட்டி வெளியான இந்தப் புதிய பைபிள், கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மனதைப் பெரிதும் புண்படுத்தியிருக்கிறது. இதனை இந்து மதப் பெரியவர்கள் படித்தால் கொதித்துப் போவார்கள்'' என்றார் அவர்.

`மேலும் விளக்கமாகக் கூறுங்கள்' என்றோம் நாம்.

"வாடிகனில் உள்ள போப் 16-ம் பெனடிக்ட், இந்த ஆண்டை இயேசுவின் புனித சீடர்களில் ஒருவரான புனித பவுல் ஆண்டாக அறிவித்துள்ளார்.

இதையொட்டி, கடந்த ஜூன் மாதம் மும்பை பேராயர் ஆஸ்வால் கிரேசியஸ் என்பவர், மிகப் பெரிய பதிப்பக நிறுவனமான செயிண்ட் பால் மூலம், `தி கம்யூனிட்டி பைபிள்' என்ற தலைப்பில் 2,271 பக்கமுள்ள புதிய பைபிள் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுமார் முப்பதாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்ட இந்தப் புத்தகம் தற்போது தேவாலயங்களில் விறுவிறுப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

இதன் தமிழ்ப் பதிப்பை அச்சிடும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபோது மிகவும் நொந்து போய்விட்டோம்.

அதேபோல, பல மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு தங்களது மனவருத்தத்தையும் தெரிவித்தனர்'' என்றார் ரபேல்.

"இந்தப் புதிய பைபிள் முழுக்க, முழுக்க இந்து மத வேத நூல்கள் மற்றும் இந்து மதக் கடவுள்களை மேற்கோள்காட்டி எழுதப்பட்டுள்ளது. இந்திய கலாசாரத்தைத் தழுவி இது எழுதப்பட்டுள்ளதாக இதன் ஆசிரியர் அருட்தந்தை அகஸ்தீன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்திய வேதநூல் என்ற பெயரில் இந்துக்களையும், கிறிஸ்துவர்களையும் குழப்பி இந்த கம்யூனிட்டி பைபிள் வெளிவந்துள்ளது.

பைபிளில் உபநிடதம், ரிக் வேதம், மகாபாரதம், யோக சூத்ரா, பாகவத புராணம், நாரத பக்தி சூத்திரம், பகவத் கீதை ஆகியவை மேற்கோள்காட்டப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, பைபிளின் தொடக்க நூல் என்ற பகுதியில் 32-வது அதிகாரத்தில் யாக்கோபு கடவுளிடம் சண்டையிடுதல் என்ற பகுதியில், அந்த சம்பவத்தை மகாபாரதத்தில் அர்ஜுனன் கடவுளிடம் சண்டையிடுவதற்கு ஒப்பிட்டுள்ளனர். இந்துக் கடவுளை கிறிஸ்துவ கடவுளுடன் ஒப்பிட்டுள்ளனர்.

குரானின்படி ஆபிரகாம் (இப்ராஹீம்), யாக்கோபு (யாகூப்) ஆகியோரை இறைத்தூதர்களாக கருதும் முஸ்லிம்களின் மனதை இது புண்படுத்தாதா?

அதேபோல், எகிப்தில் பத்து பெருந்துன்பங்கள் என்ற பகுதியில் மன்னன் பாரவோன், அடிமைகளாக இருந்த இஸ்ரேல் மக்களை விடுதலை செய்ய மறுக்கிறான். மூர்க்க குணம் கொண்ட மனிதனாக பாரவோன் இருந்ததைத் துரியோதனனோடு ஒப்பிட்டுள்ளனர்.

பைபிளில் செங்கடல் இரண்டாகப் பிளந்து கடலின் நடுவே, பாதை ஏற்பட்டு இஸ்ரேல் மக்கள் கடந்து செல்வதை இந்து மதநூலான நாரத பக்த சூத்ராவுடன் ஒப்பிட்டு இதுதான் மறுபிறவி எடுப்பது, முக்தி அல்லது மோட்சம் என்றும் புதிய கண்டுபிடிப்பாக புதிய பைபிளில் எழுதியுள்ளனர்.

மறுபிறவி, அவதாரம் ஆகியவற்றில் நம்பிக்கையில்லாத கிறிஸ்துவர்களுக்கு இது அதிர்ச்சியளிக்கிறது.

இந்த பைபிளில் ஓர் இடத்தில் கடவுளுக்குரிய மனிதர்கள் உயர்ந்தவர்களாகவும், மற்றைய கடவுள் பற்றுள்ளவர்கள் சாதாரண மனிதர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது சரியானதுதானா?

சிவன், கிருஷ்ணர் சிலைகளை தேவாலயத்தில் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் இயேசுவின் வார்த்தைகள் என்று நியூ கம்யூனிட்டி பைபிளில் எழுதியவர்கள் சொந்தம் கொண்டாடுவதை இந்துக்கள் எப்படி ஏற்பார்கள்?

பைபிளில் திருப்பாடல்கள் ஐந்தாம் அதிகாரத்தில், `பாதுகாப்பிற்காக மன்றாடல்' என்ற தலைப்பில் உள்ள பகுதியை காயத்ரி மந்திரத்துடன் ஒப்பிட்டுள்ளனர்.

பைபிளில் மத்தேயு எழுதிய நற்செய்தி 13_வது அதிகாரத்தில், இயேசு உவமை வழியாகப் பேசியதை சக்தி வாய்ந்ததாகவும்,

இந்த உவமைகளை ராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனையுடன் ஒப்பிட்டும், பரமஹம்சரின் போதனைக் கதைகள் சாதாரண கதைகள் என்றும் இயேசு குறிப்பிட்டுள்ளது சக்தி வாய்ந்தவை என்றும் எழுதியுள்ளனர். இது நியாயமா?

இதையெல்லாம்விட, கம்யூனிட்டி பைபிளின் 1645-ம் பக்கத்தில் இந்திய உடையில் மேரி மாதாவையும் அவரது கணவர் சூசையப்பரை வேட்டி கட்டிய ஓர் இந்திய விவசாயி போலவும் படம் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படம் மேரிமாதா குழந்தை இயேசுவுடன் எகிப்துக்கு ஓடிச் செல்வதை சித்திரிக்கும் படம். இந்தப் படத்தால் இந்தச் சம்பவம் ஏதோ இந்தியாவில் நடந்ததைப் போல் ஓர் எண்ணத்தைத் தோற்றுவிக்கும்.

ஆனால், இதே பைபிளில் இதற்கு இரண்டு பக்கம் தள்ளி, இயேசு காஷ்மீரில் வாழ்ந்தார், அவருக்கு கல்லறை உண்டு என்ற வாதத்தை மறுத்துள்ளனர். இந்திய உடையில் இவர்களைப் பார்த்த மக்களுக்கு காஷ்மீர் பற்றிய தகவல் குழப்பத்தை ஏற்படுத்தாதா?

இப்படி புதிய பைபிள் முழுவதும் கிறிஸ்துவ மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையிலான கருத்துக்கள் பரவியுள்ளன.

இப்படியொரு குழப்பத்தோடு இதை ஏன் வெளியிட வேண்டும்?

இந்து மதக் கருத்துக்களை ஏற்று பைபிளை வெளியிட்டுள்ளதாகக் கூறும் பாதிரியார்கள், இந்து சன்னியாசிகள் போல் காவிநிற உடைகளை அணிய வேண்டியதுதானே?

இந்துத் துறவிகள் போல், சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டியதுதானே?'' எனக் கொந்தளிப்போடு முடித்தார் ரபேல்.

இதே சங்கத்தின் செயலாளர் கிளமண்ட் செல்வராஜ் நம்மிடம், ``
கடந்த 60 ஆண்டுகளாகவே சிறிதுசிறிதாக இந்து மதத்தோடு, கிறிஸ்துவ மதத்தைப் பொருத்தி மதத்தைப் பரப்பும் வேலையில் பாதிரியார்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இது தேவையில்லாதது. அவரவர் மதங்களில் உள்ள கருத்துக்களை அந்தந்த மதத்தினர் புனிதமாக வழிபட்டு வருகின்றனர்.

அதில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம். கடந்த 1948-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு கத்தோலிக்க பாதிரியார் ஆஞ்சலோ பெனடிக்ட், சுவாமி சுபானந்தா என்று பெயரை மாற்றிக் கொண்டு, குஜராத்தில் இந்து முறைப்படி பூஜை செய்து, இயேசுவின் வசனங்களை இந்து முறைப்படி பரப்பினார்.

இவருடன் இருந்த பாதிரியார் பீட்டர் ஜூலியா, சுவாமி சில்லானந்தா என்று பெயரை மாற்றிக் கொண்டு, மராட்டியத்தில் சஞ்சீவன் ஆசிரமம் நடத்தி வந்தார். இவரது ஆசிரமத்தில் சிவலிங்கத்தில் சிலுவையைப் பதித்திருந்தார். இது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்.

இதுபோன்ற புதிய பைபிள், பாதிரியார்களின் விசுவாசமற்ற செயல்பாடுகள் இந்தியா முழுவதும் உள்ள பதினைந்து கோடி கத்தோலிக்க மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளன.

இந்த கம்யூனிட்டி பைபிளைத் தயாரிக்க யாரிடமும், இவர்கள் கருத்துக் கேட்கவில்லை. இந்தப் புத்தகம் தேவையற்றது என்று அனைத்து ஆயர்களுக்கும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம்.

இன்னும் பதில் வரவில்லை. எனவே, இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களின் மனதைப் புண்படுத்தும் இந்தப் புத்தகத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விரைவில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளோம்'' என்றார் உறுதியாக.

கம்யூனிட்டி பைபிள் ஏற்படுத்தப்போகும் கலகம் என்னவென்பது போகப்போகத்தான் தெரியும்.

குமுதம் ரிப்போர்ட்டர் 31.08.2008. இதழிலிருந்து
ஆதாரம்: குமுதம் ரிப்போர்ட்டர் 31.08.2008.
................................................
கிறிஸ்துவ‌ த‌லைமை பீட‌மான‌ வ‌ட்டிக‌னிலிருந்தே போப்பாண்டவரின் ஆசியோடு மாற்று பைபிளை த‌யாரித்து இந்துக்க‌ளை ம‌த‌ம் மாற்ற‌ ஆவ‌ண‌ செய்து வ‌ருகின்றார்க‌ள் என்றால் புரிந்து கொள்ளுங்க‌ள்.
..........................................................
கிறிஸ்தவ மதக்கு மாற்றும் தொழில் இரகசியம்.
நோய் நொடியினால் பாதிக்கபட்டிருப்பவர்கள், சிறையில் வாடுபவர்கள், தொழிலில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கடன் தொல்லை, வீட்டில் வசிப்பவரின் கொடுமை, கணவன் தொல்லை, மனைவி தொல்லை, அண்ணன் தொல்லை, மாமியார் தொல்லை, போன்று தொல்லையில் இருப்பவர்கள் யார் எதைக் கூறினாலும் கேட்கும் மன நிலையில் இருப்பார்கள்.

ஆகையினால் இவர்களை குறி வைத்து பைபிளில் இருக்கும் சில வசனங்களில் தேன் தமிழை கலந்து பேசி கவர்வது..

ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்

ராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன.

மொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை.

தற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன.

பணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன.

பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது.

பெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது.

மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது. ஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34628
....................................

எங்கே மக்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று அலையும் கிறிஸ்துவ மிஷனரிகள் அங்கே சென்று அவர்களுடைய துயரமான நிலையை சாதகமாக பயன்படுத்துக்கொண்டு மதம் மாற்றும் வேலையில் இறங்குவது தெரிந்ததே.

ஆப்கானிஸ்தானையும் ஆக்கிரமித்து சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருகிறேன் என்று இறங்கி அங்குள்ள குழந்தைகளுக்கு இயேசு கிறிஸ்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
Christian Missionairies in Afghanistan Brainwashing Children to Convert Religions
குழந்தைகளை மதம் மாற்றும் மூளைச்சலவை.
Christian Missionaries In Afghanistan
மூளைச்சலவை.ஆப்கானிஸ்தானிகள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்கள் பெறப்போவதாக வாக்களிக்கப்பட்டு காட்டப்படும் நவீன வீடுகளின் மாதிரிகள்.
................................
அதே சமயத்தில்......
பிறமத‌த்தை திணிப்பவர்களை கொல்லுங்கள். ‍‍‍பைபிள் உத்தரவு

கிறிஸ்தவ மிஷனரிகள் தொன்று தொட்டு இன்று வரை உலகெங்கும் கிறிஸ்துவத்தை பரப்பி மற்ற மதத்தினரை கிறிஸ்துவத்துக்கு மாற்றிக் கொண்டிருக்கின்றார்களே. இவர்களுக்கு மாற்று மதங்களின் வேதங்கள் ஏதாவது தண்டனை கூறுகிறதா? இல்லையே !!!!

பிறமதத்தின் பக்கம் அழைப்பவனுக்கு பைபிள் என்ன‌ கூறுகிற‌து என்ப‌தை பாருங்க‌ள்

பைபிள்: உபாகமம். அதிகாரம் 13 . ஸ்லோகம் 6 - 9
BIBLE: DEUTRONOMY. CHAPTER 13 VERSE 6 - 9
_______________________________________

6. உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனாகிலும், உன் குமாரனாகிலும், உன் குமாரத்தியாகிலும், உன் மார்பிலுள்ள உன் மனைவியாகிலும், உன் பிராணனைப்போலிருக்கிற உன் சிநேகிதனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தேவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி,

If thy brother, the son of thy mother, or thy son, or thy daughter, or the wife of thy bosom, or thy friend, which is as thine own soul, entice thee secretly, saying, Let us go and serve other gods, which thou hast not known, thou, nor thy fathers;

7. உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை தொடங்கி மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களில், நீயும் உன் பிதாக்களும் அறியாத அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி இரகசியமாய் உன்னை ஏவிவிட்டால்,

Namely, of the gods of the people which are round about you, nigh unto thee, or far off from thee, from the one end of the earth even unto the other end of the earth;

8.. நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கங்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்து வைக்காமலும்,

Thou shalt not consent unto him, nor hearken unto him; neither shall thine eye pity him, neither shalt thou spare, neither shalt thou conceal him:

9. அவனைக் கொலை செய்துபோடவேண்டும்; அவனைக் கொலை செய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது.

But thou shalt surely kill him; thine hand shall be first upon him to put him to death, and afterwards the hand of all the people.

ஆதாரம்: http://www.tamil-bible.com/lookup.php?Book=Deuteronomy&Chapter=13&Verse=6+-+9&Kjv=2


இதையும்  படியுங்கள்
"க்ளிக்" --  "புனித பைபிளில்" "அடங்காத‌ காம வேசிகள்"
.......................................................
இயேசு, ஏசு, கர்த்தர், கிறிஸ்தவம், பைபிள்.

31 comments:

 1. சகோதரா பல முக்கிய விடயங்களை ஆராய்ந்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள். மதங்கருக்கு ஆட்சேர்ப்பு செய்வோர் அதைவிட்டு சமூக சேவைக்கு ஆட்சேர்க்கலாமே

  ReplyDelete
 2. சில வருத்தமான செய்திகலும் சில அவர்களுக்குள்ளேயே கேலிக்கூத்தாகவும் உள்ளது.

  ReplyDelete
 3. குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com

  ReplyDelete
 4. குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com

  ReplyDelete
 5. வணக்கம்,
  மதம் நாம் வழிபடும் பழக்கங்களின் அடையாள சின்னமே!
  மதம் மொழி இனம் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் இறைவன் .
  ----
  அவரவர் தமதமது அறிவறி வகைவகை
  அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
  அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
  அவரவர் விதிவழி அடையநின்றனரே
  நம்மாழ்வார்!

  ReplyDelete
 6. ஆகையால் நீங்கள் புறப்பட்டு போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி பிதா குமாரன் பரிசுத்தஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து

  நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

  மத்தேயு 28:19-20

  இதை தான் கிறிஸ்தவர்கள் செய்கின்றார்கள்

  ReplyDelete
 7. இது குளிக்க போய் சேற்றை வரி பூசிகொண்டது மாதிரி இருக்கு..

  :-(

  ReplyDelete
 8. மதம் மாற்றம் மடத்தனம்தான் அதிலும் கட்டாய மறைமுக மதமாற்றம் தேவையற்றது...........நல்ல பதிவு வாழ்த்துகள்

  ReplyDelete
 9. நல்ல தகவல்கள் நண்பா

  ReplyDelete
 10. முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றி புனித பைபிள் - 03


  “ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன், நான் போவது உங்களுக்கு நன்மையைத் தரும்.
  ஏனென்றால் நான் போனால், உதவியாளரை அனுப்புவேன்,
  நான் போகாவிட்டால் அந்த உதவியாளர் வரமாட்டார். அவர் வரும்போது இவற்றைப் பற்றி உண்மைகளையெல்லாம் உலகிலுள்ள மக்களுக்கு நிரூபிப்பார். அதோடு பாவத்தின் குற்றம் பற்றியும், தேவனோடு உள்ள சரியான உறவு பற்றியும், நியாயத்தீர்ப்பு பற்றியும் விளக்குவார். அந்த உதவியாளர், மக்கள் என்னை நம்பாததால் அவர்கள் பாவம் செய்தவர்கள் என்பதை நிரூபிப்பார்.
  அவர் தேவனிடம் எனக்கிருக்கிற நல்ல உறவு பற்றியும் நிரூபிப்பார். ஏனென்றால் நான் பிதாவிடம் செல்கிறேன்.
  அப்பொழுது நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்.
  நியாயத்தீர்ப்பு பற்றிய உண்மையை அவர் உலகத்துக்கு நிரூபிப்பார்.
  ஏனெறால் இந்த உலகை ஆள்கிற சாத்தான் ஏற்கெனெவே
  நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிறான்.
  உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாதபடி அந்த செய்திகள் அதிகப்படியானவை.” (யோவான் 16 : 7 - 12)

  ReplyDelete
 11. NO RELIGION IS BETTER THAN HINDU RELIGION.

  THOSE WHO CONVERT TO CHRISTIANS ARE FOR MONEY AND LUXURY.

  EASY TO EMIGRATE TO OTHER COUNTRIES IF YOUU ARE A CHRISTIAN.

  DEAR CHRISTIANS LEAVE HINDUS ALONE.

  IT IS A FACT THAT THE CHURCHES IN EUROPE HAS NO WORSHIPPERS. THEN THE CHURCHES ARE BEING SOLD OR RENTED TO HINDUS AND ISLAAMISTS.

  SO YOU ARE USING INDIA FOR YOUR HUNTING.

  SUBAS CHANDRAN

  ReplyDelete
 12. மன திருப்திக்கும் ,மத மாற்றத்திற்க்கும் உள்ள வித்யாசம் தெரியாமல் மனதை வருத்தாதீர்கள் .வலையில் (வெப்பில்) கிடக்கும் குப்பையை விட்டு விட்டு கொள்கைக்காக கோவில்களை (மணம் ) இடிகாதீர்கள் ஜெய் ஹிந்த் .

  ReplyDelete
 13. ஏழை மக்களை மதம் மாற்றுவதனால் அவர்களுக்கு என்ன கிடைக்கப் போகின்றது ?? i dont understand? என்ன காரணத்துக்காக இந்த மதம் மாற்றம் ? அதையும் சொன்னால் புரிந்து கொள்ள முடியும் ."".கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன"" இந்த மாதிரி பண்றதுனால அவங்களுக்கு என்ன லாபம் ? அவங்க காசு குடுத்து இவங்கள change பண்ணி என்னத்த புடுங்க போறாங்க? மதம் மாறினா என்ன சொத்து எழுதி குடுப்பாங்களா?

  ReplyDelete
 14. ஏழை மக்களை மதம் மாற்றுவதனால் அவர்களுக்கு என்ன கிடைக்கப் போகின்றது ?? i dont understand? என்ன காரணத்துக்காக இந்த மதம் மாற்றம் ? அதையும் சொன்னால் புரிந்து கொள்ள முடியும் ."".கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன"" இந்த மாதிரி பண்றதுனால அவங்களுக்கு என்ன லாபம் ? அவங்க காசு குடுத்து இவங்கள change பண்ணி என்னத்த புடுங்க போறாங்க? மதம் மாறினா என்ன சொத்து எழுதி குடுப்பாங்களா?

  ReplyDelete
 15. Unless you really believe that, "Jesus died for our sins & rose again on the third day" there is no use of converting someone to Christianity by forcing them.

  HE is the one & only true God.
  you believe it or not, thatz the fact.

  Y u guys r accepting & converting to Christianity?? if u don't believe then don't get convert.

  can anyone say, any of your God sacrifice anything for people, but Jesus sacrifice his life for us.

  Good man should have only one wife, then how can God have so many wives???

  Your God is angry & kill people, But Jesus teach us, how to forgive. Jesus live as a living example to all of us.

  you guys believe it or not, thatz the fact.

  I dont mean to say, all the christian r gooooood, there are christian people who do evil things, they r not true believer of Jesus, thatz all i can say. thanx for reading it patiently

  ReplyDelete
 16. Dear sister jeya......

  உங்களுடைய சமயத்துக்கு விஞ்ஞானம் என்றால் கிலி பிடிக்கும். கலிலியோ உலகம் உருண்டை என்று சொன்னதும் தண்டித்த போப்பாண்டவரின் மதம் உங்கள் மதம். உலகம் உருண்டை வடிவம் என்று திருவாசகத்தில் திருவண்டப்பகுதியில் சொன்ன (கலிலியோவுக்கு முன்னரே) சொன்ன மதம் எங்களுடையது! எனவே உங்களால் விஞ்ஞானபூர்வமான கருத்துக்களை உள்ளடக்கிய எமது சமயத்தத்துவங்களை இலகுவில் புரிந்துகொள்ள மாட்டீர்கள் ஆயினும், புரியவைக்க முயற்சிக்கிறேன்.

  சடம்+சக்தி இது விஞ்ஞானத்தத்துவம். எமது சமயத்தின் தத்துவமும் இதுதான். சிவம் சடப்பொருள். சக்தி சடப்பொருளோடு இணைந்துள்ளபோது இயக்கம் நடைபெறும். உலக இயக்கமும் அண்டங்களின் இயக்கமும் சடமாகிய சிவத்துடன் சக்தி இணைந்துள்ளபோது நடைபெறும்.இதுவே எமது சமயத்தின் விஞ்ஞானம் வியந்துநோக்கும் தத்துவம். சக்தி மூன்று வகைப்படும். இச்சாசக்தி,கிரியாசக்தி,ஞானசக்தி என்பனவே அமை. சில கடவுளருக்கு(ஆண் கடவுள்=சடம்) இம்மூன்றில் ஒன்றை பெண்ணாகவும் ஏனையவற்றை ஏனைய வடிவங்களிலும் இணைத்திருப்பர். சில கடவுளருக்கு மூன்றையும் பெண் வடிவில் இணைத்து உருவகப்படுத்தியிருப்பர். சிலருக்கு இரண்டு சக்திகளுக்கு பெண் வடிவத்தையும் ஏனைய ஒன்றை இன்னொரு வடிவமும் கொடுத்திருப்பர்.
  முருகனுக்கு இச்சாசக்தி,கிரியாசக்திகளாக பெண் தெய்வங்களையும் ஞானசக்தியாக வேலையும் சுட்டுவர். சிவனுக்கு மூன்றையும் பார்வதி.கங்கை,விஷ்ணு(மோகினி)யாகச் சுட்டுவர். நாராயணனுக்கு பூமாதேவி,நீளாதேவி,இலட்சுமி என்று மூன்று பெண்தெய்வங்களை சக்திகளாக உருவகப்படுத்தியுள்ளனர். இப்படி விஞ்ஞானத்தை விஞ்சிய மதம் எங்களுடையது!
  கி.மு ஒருசில நூறு வருடங்களுக்கு முன்னரே உலகம் உருவானதாக பைபிள் சொல்கிறது. விஞ்ஞானம் உங்கள் மதத்தை "ஜோக்" மதமாக்கிவிட்டது. எங்களுடைய சூரிய நாட்காட்டியைப் பார்த்து "அடடா நாம் நினைப்பதுபோல் 200 கோடிக்கு மேல் என்பதை உங்களுடைய நாட்காட்டி காட்டுகிறதே" என்று உலகத்தோற்றக் கணிப்பில் எமது மதத்தை விஞ்ஞானம் வியந்துநிற்கிறது.
  விவேகானந்தர் சொன்னார் "எங்களிடம் உலகமே கற்றுக்கொள்ளும் அளவுக்கு சமயத்தத்துவங்கள் உண்டு. ஆனால் எங்கள் சொத்துக்களை சுரண்டியதால் ஏழ்மையில் தள்ளப்பட்டுள்ளோம். அதைப் பயன்படுத்தி உங்கள் மதத்தை திணிக்காதீர்" என்றார்.

  நீங்கள் செய்வது அதுதான். ஏழைவீட்டில் காசையும் சோறையும் காட்டி மதம் மாற்றுவது உங்கள் வேலை. இதை உங்களுடைய உள்மனமே ஒத்துக் கொள்ளும். நீங்கள் அமைதி மதம் என்று சொல்லுவீர்கள்.....யாருக்கு பூச்சாண்டி காட்டுகின்றீர்கள்? இலங்கையில்(ஈழத்தில்) துரைமாரின் ஆட்சியில் எல்லா கோயில்களையும் இடித்து அழித்து நாசம் செய்தவர்கள் உங்கள் மதத்துக்காரர்! ஒருகோயிலைக் கூட விட்டுவைக்கவில்லை. என்ன தமிழகத்தில் குறுநிலமன்னர்கள் இருந்ததால் தப்பிற்று!

  யூரோப் நாட்டில் கொலைத் தண்டனைகளை விதித்து மதத்தைப் பரப்பியவர்கள் நீங்கள்! "அன்பே சிவம்" என்ற கொள்கையை உடைய மதம் எங்களுடையது.(எங்கள் கடவுள் இல்லை அன்பே வடிவானவர்.அவருக்கு உங்களை மாதிரி அறிவற்றவர்களைக் கண்டால் கவலையில் வரும் ) உங்களுடைய இயேசுநாதர் எங்கள் இந்தியத் திருநாட்டில் மற்றும் தமிழகத்தில் வாழுகின்றார் என்றால் எமது மதம் உலகுக்கு போதித்த அகிம்சையே காரணம்! சகிப்புத்தன்மையே காரணம்!
  இன்று அகிம்சை மதம்போல் வேஷம்போடுகின்றீர்கள்.......மகாத்மா காந்திக்கு முன்னர் வெள்ளைக்கார நரிகளுக்கு "அகிம்சை" என்றால் புரியாது. உலகுக்கே அகிம்சையைப் போதித்த மகாத்தாவின் மதம் எங்களுடையது! ஏன் போப்பாண்டவருக்கு கூட அகிம்சை என்றால் என்ன என்று தெரியாது. இல்லாவிட்டால் கலிலியோ கலிலி(தொலைகாட்டி மூலம் வானத்தை ஆராய்ந்தவர்)க்கு தண்டனை வழங்கியிருக்குமா உங்களின் கத்தோலிக்கபீடம்?

  உலகில் எமது மதம் இல்லையென்றால் கிருஷ்தவம்-முஸ்லீம் என்று சண்டைபிடித்து அணு ஆயுதங்களையெல்லாம் பாவித்து உலகில் அழிவுகள் அரங்கேறும்!உதாரணம் ஈராக்-அமெரிக்கா யுத்தம்! முஸ்லீம் நாடுகள் என்றால் உங்களுக்கு ஒரு பயம்! ஏனென்றால் முஸ்லீம் திருப்பியடிப்பான்! நம் இந்துமதம் அகிம்சை காக்கும் என்பதால் முஸ்லீம்நாடுகளில் உள்ளபயம் எம்மிடம் இல்லை! மனசாட்சியைத் திறந்து பாருங்கள் உண்மையிலேயே இந்தியாவில் பிறந்திருந்தால்!

  ReplyDelete
 17. Dear Anonymous ,
  your reply to Jaya isv ery nice and informative . But do u think she ll realize this. I was argued this with lot christian friends. But they are fully brain washed and really lost the power of self thinking. They are driven by some force. This Jaya might be a proudful hindu before one ar 2 generations. For some money or somethin else they are converted. Hiduism is not a religion. Its way of life. It s example for the whole world. Just ask the converted ppl to think first. This is just like drug addict. I am really not like anti -christian. But worrying a lot our ppl lost their thinking capacity and getting fool by someone else.
  Note : annonny pls mention ur name or account.

  ReplyDelete
 18. மதம் என்பது மனிதர்களை நல்வழிப்படுத்த தான் . அதனை ஒவ்வொருவரு ஒவ்வொரு நம்பிக்கையின் அடிப்படையில் பின் பட்ட்ருவார்கள். அதனை மட்ட்ரவர்கள் திணிக்க தேவை இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

  ReplyDelete
 19. மகாத்மா காந்திக்கு முன்னர் வெள்ளைக்கார நரிகளுக்கு "அகிம்சை" என்றால் புரியாது. உலகுக்கே அகிம்சையைப் போதித்த மகாத்தாவின் மதம் எங்களுடையது

  Then why did you kill him ?

  ReplyDelete
 20. உங்களுடைய சமயத்துக்கு விஞ்ஞானம் என்றால் கிலி பிடிக்கும். கலிலியோ உலகம் உருண்டை என்று சொன்னதும் தண்டித்த போப்பாண்டவரின் மதம்

  Did Jesus do that or Pope?

  ReplyDelete
 21. இலங்கையில்(ஈழத்தில்) துரைமாரின் ஆட்சியில் எல்லா கோயில்களையும் இடித்து அழித்து நாசம் செய்தவர்கள் உங்கள் மதத்துக்காரர்!

  Now buddhist sinhalas hve destroyed many hindu temples. Take action.

  ReplyDelete
 22. Hiduism is not a religion. Its way of life'

  Shakti, If so, let them go to a religion if they want a religion.
  If your Hinduism is a way of life, then why do you stop people going for a religion?

  ReplyDelete
 23. christians want pigs and dogs who can eat shit and wag tails into their religion. what we should do is to educate those pigs and dogs and graduate them to human beings so that they can be fit Hindus. till then, why bother about a religion which houses all sort of animals?

  anyhow it is great to find such a website.

  ReplyDelete
 24. இந்து என்பது ஒரு சொசைட்டி அது மதம் அல்ல . ”மகாத்மா காந்திக்கு முன்னர் வெள்ளைக்கார நரிகளுக்கு "அகிம்சை" என்றால் புரியாது. உலகுக்கே அகிம்சையைப் போதித்த மகாத்தாவின் மதம் எங்களுடையது”

  இந்த கூட்ரு “In bible Jesus showed me the way of patientnce (பொருத்து கொள்ளுதல்) which is known as aghimsa" அன்னல் காந்திஅடிகள் கூறியது

  அன்பு அன்பது நம் மீது தினீக்கபடும் கோபங்களை பொருத்து கொள்ளுதல் இதனை 2000 ஆயிரம் ஆண்டுகு முன்பே இயேசு கூறயுள்ளார்

  christian Knows love meaning

  "In rig veda it is clear that shivam is love It means love is only mean to see god .dont put sivam idol is love this mean u r killing our fore father love to over mankind"

  ReplyDelete
 25. \\jeya said...
  \\Unless you really believe that, "Jesus died \\for our sins & rose again on the third day" \\there is no use of converting someone to \\Christianity by forcing them.

  \\HE is the one & only true God.
  \\you believe it or not, thatz the fact.

  \\Y u guys r accepting & converting to \\Christianity?? if u don't believe then don't \\get convert.

  \\can anyone say, any of your God sacrifice \\anything for people, but Jesus sacrifice his \\life for us.
  Madam,
  U say Jesus died for others.
  There are so many who die for others.
  First of all, on what basis u r telling Jeuss died for people.
  Jesus cured diseases; doctors also cure diseases.
  He had some concepts to propagate which administartive people of that time did not like; so they killed him.
  That happens now also.
  Jesus killing is a "Local Murder" which u exploit it for converting the people.
  Why do u convert?
  Bcoz resources in the world r going down.
  Sitting in the west I can control u if u belong to chrsitainity.
  In the name of GOD it is just a fight for resources.
  Same with Muslims also.
  Already petrol resource is going down.
  After petrol?
  Convert the pple to Muslim religion.
  Sitting in middle east u can enjoy the resources of all world.

  Whether u accept it or not this is what behind the conversion motive.
  If u r not able to see that then u r big zero.

  ReplyDelete
 26. Bible says all those accepted christ is his BRIDE (Manavaati) hence christ will take his Brides with him during his second coming. So christ can have 144000 brides. now every christin says they Christs BRIDE how possible this to be a Bride to christ all men and women? and according to this aspect Christ has cores and crores of BRIDES. Ms Jeya mentioned Hindu god have many wives. But generation to generation christ is getting increased his BRIDES to take with him

  ReplyDelete
 27. Hi.

  I am very happy to read this blog listings.
  Thank you for all.

  I must and like to share my past life.

  I have loved one christen girl, more than 3 years. She requested me to convert and I did that also. But she slowly tries to convince me for convert my family with help of her father. She said, and then only her father accepts our love.

  I said I never do that. Still I don’t know she loved me? Or me and my family conversion?

  LOL,

  For example in "Pammal K.Sampatham" sneha told to apps, she loved only Australian Ananad. My life is same that move.

  From that day, I rejected and broken the relationship with her.

  I am Happy Now.............. Happy..........

  Right now I am enjoyed my life with my family and I am peaceful member on this blog.


  Thank you,
  Sakthi.

  ReplyDelete
 28. இதிலிருந்தே தெரியவில்லையா, வாடிகனுக்கும் போப்பிற்கும் க்றிஸ்துவைப் பற்றியோ அவர் கூறியதாகக் கூறப்படும் (?!) போதனைகளைப் பற்றியோ கவலை இல்லை, அவர்கள் பொழைப்பு நடந்தால் போதும்.

  முதலில் உலகம் தட்டை என்றார்கள். சிரிப்பாய் சிரித்து விட்டது.

  மில்லினியத்தில் உலகம் அழியும் என்றார்கள். அது ஏடாகூடமான காமெடி பீஸ் ஆகி விட்டது.

  சய்ன்ஸும் ரிலிஜனும் கைகோர்க்க வேண்டும் என்றார்கள். சயின்ஸும் ரிலிஜனும் வேறு வேறு அல்ல என்ற ஹிந்து மதத்தைக் கண்டவுடன் பேதியாகி விட்டது அவர்களுக்கு.

  இப்போது கடைசி முயற்சியாக ஹிந்துமதக் கருத்துக்களை தங்கள் புத்தகத்தில் புகுத்த முற்பட்டிருக்கிறார்கள். அது தான் திரிபுக்கும் புகுத்தலுக்கும் பலமுறை ஆட்பட்டிருக்கிறதே, எனவே பிரச்சினை இல்லை.

  இங்கே பின்னூட்டமிட்டிருக்கும் சில அரைவேக்காடு க்றிஸ்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள் மற்றும் கேள்விகள்: வேண்டுகோள்: உங்கள் அரைவேக்காட்டுத்தனத்தைப் பார்த்து யூரோப்பிலும் அமெரிக்காவிலும் வாழும் க்றிஸ்தவர்கள் சிரியோ சிரியென்று சிரித்து மதம் மாறத் தொடங்கி விட்டார்கள். அவர்களிடம் முடிந்தால் தொடர்பு கொண்டு அச்செயலுக்கான காரணத்தை அறியவும்.

  கேள்விகள் என்னவென்றால் "மனிதப் பிறவியில் மறு ஜென்மம் இல்லை என்றால், நீங்கள் பாவம் செய்யத்தான் போகிறீர்கள் என்பது உங்கள் ஆண்டவருக்கு தெரிந்தே இருக்கிறது. நீங்கள் பிறந்து பண்ணப் போகும் பாவத்திற்காக அவர் ஏற்கனவே மண்டையைப் போட்டு விட்டார்.

  1. இப்படி இருக்கையில் கருணையே வடிவான கடவுள் உங்களைப் பிறக்காமலேயே விட்டிருந்தால் நீங்கள் பாவமே செய்திருக்க மாட்டீர்கள் தானே? ஏன் உங்களைப் பிறப்பிக்க வேண்டும், நீங்கள் பாவம் தான் செய்யப் போகிறீர்கள் என்றால்? ஆதாமின் ஆப்பிள் புருடாவை மேற்கோள் காட்டாதீர்கள். அப்படியேயாகினும் வட்டிக்கு வட்டி குட்டி போடுவது போல பாவத்திற்கு பாவம் பெரும்பாவம் என்று போய்க்கொண்டே இருப்பதும் ஒரே ஒரு தேவகுமாரனால் விமோசனம் என்பதும் ஹாரி பாட்டர் போன்ற கதைக்கு நன்றாக இருக்கும். லாஜிக் உதையோ உதை என்று உதைக்கும் ஆனால்.

  2. ஸோ உங்கள் கடவுள் என்பவர் வெறும் வியாபாரி, அவ்வளவே, நீங்கள் பாவம் செய்வதற்கே பிறப்பிக்கப் பட்டு, சர்ச்சினாலும் பாதிரியாலும் அறிவு கொடுக்கப் பட்டு ஓஹோ, நாம் பாவம் செய்தவர்கள், ஏனென்றால் நம் ஆதாமோ ஏவாளோ செய்த பாவத்திற்கு நாம் தான் பலி கடா என்று உணர்ந்து வியாபாரக் கடவுளிடம் விசுவாசம் காண்பிப்பீர்கள், அவ்வளவு தானே?

  3. பாவமே அறியாத மனநலம் குன்றியவர்கள் பிறப்பது ஒரே பிறப்பென்றால் உங்கள் கடவுள் எவ்வளவு கொடூரமானவர்? இருக்கும் ஒரே பிறவியில் மனநலம் குன்றியவராய ஒருவரைப் படைத்து விடல் யார் செய்த பாவம்?

  போய் அமர்ந்து யோசித்துப் பாருங்கள், திறனிருந்தால்.

  ReplyDelete
 29. When it comes to scientific claims, the Bible has the dumbest claims, with all due respect to Jews and Christians. The Bible claims that Earth has four ends and four corners. Nobody can ever think a ball or a cycle to have corners and ends! Only flat items can have corners and ends, and this is exactly what the bible is trying to express regarding the shape of the earth. The earth is not flat, as once thought and it has no corners or ends at all. If Magnetic Poles can be taken as ends or corners of earth, then this definitely opposed to the axis of rotation.

  ReplyDelete
 30. கிறித்துவத்திற்கு வந்து விடு அது தருகிறோம் இதுதருகிறோம் என்று யாரும் சொல்வதாக தெரியவில்லை.உங்கள் பாவங்களை மன்னிப்பார்.பாவம் மன்னிக்கப்பட்டு புதிய மனிதராவிீர் என்று சொல்வதை கேள்வி பட்டு உள்ளேன்.அப்படியே கொடுக்கும் பணத்திற்கு ஆசைபட்டால் அதில் எத்தனை நாள் வாழ முடியும். ஆனால் ஒன்று உண்மை இந்து கிறிஸ்து ஆகிறான். முஸ்லீம் ஆகிறான். ஆனால் கிறிஸ்துவனோ முஸ்லீமோ இந்து வானதாக செய்தி இல்லை.

  ReplyDelete