அன்பிற்குரிய‌ த‌மிழ் பெரும‌க்க‌ளே, இத‌ன் மூல‌ம் பைபிளை ப‌ற்றி தெரிந்து கொள்வ‌துட‌ன் அனைவ‌ருக்கும் எடுத்துக் கூறுங்க‌ள்....

1. இத்தள‌த்தில் காட்ட‌ப்ப‌டும் மேற்கோள் பைபிள் வ‌ச‌ன‌ங்க‌ள் அனைத்தும் “பரிசுத்த வேதாகமம் தமிழில்” “HOLY BIBLE IN TAMIL LANGUAGE” http://www.tamil-bible.com/ என்னும் கிறிஸ்துவர்களின் அதிகாரப்பூர்வமான‌ த‌ள‌த்திலிருந்தே பெறப்பட்டிருக்கின்ற‌ன‌......

2. இவ்வ‌ளைத்த‌ள‌தில் உள்ள‌வை திரிப்பும் அல்ல‌. கிறிஸ்த‌வ‌ வெறுப்பும் அல்ல‌. 3.பெரும் பெரும்பான்மையான அப்பாவி கிறிஸ்துவ‌ர்களே அறியாத அப்பட்டமான உண்மைக‌ள்......


பதிவுகளை ஒவ்வொரு திரட்டிகளில் தினமும் சமர்ப்பிப்பது சிரமமாகவும் அதிக நேரச்சிலவும் ஆகின்றபடியால் வாசகர்கள் இந்த வலைப் பதிவு தளத்தின் url http://bibleunmaikal.blogspot.com/ ஐ தாங்களின் BOOKMARK FAVORITES ல் குறித்துக் கொண்டு தாங்களாகவே நேரடி DIRECT ஆக அடிக்கடி இவ் வளைத்தளத்திற்கு http://bibleunmaikal.blogspot.com/ வந்து படியுங்கள்....


**கண்ணில் கட்டிலடங்கா கருணையுடன் பால் வடியும் முகமாக ஊடகங்களிலும் சித்திரங்களிலும் சிலைக‌ளிலும் காட்சி த‌ரும் க‌ர்த்தரின் சொற்க‌ளான‌, கிறிஸ்துவத்தின் அடிப்படையான‌ பைபிள் என்ன‌ கூறுகிறது. ப‌டியுங்க‌ள்.**


ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 5 : 39) ** ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.** புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18 : 22 – 23. ல் இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.** ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்..

....இவ்வலைப்பூவில் உள்ள பதிவுகள் “புனித பைபிளில்” உள்ள சுலோகங்களை அப்ப‌டியே ஆதாரத்துடன் கொண்டுள்ளதால் எங்கள் மீது கோபம் கொண்டு தூஷிப்பவர்கள் “புனித பைபிளின்” மீது கோபம் கொண்டு “புனித பைபிளையே” தூஷிக்கிறார்கள் என்பதை உணருகின்றார்களா? மறந்து விட்டார்களா? கையிலேயே “புனித பைபிள்” இருக்குமே? அறிவுஜீவிகளே!!!இவ்வளைத்தளத்தை இல்லாமல் செய்துவிடலாம். இங்கு சுட்டிக்காட்டப்படும் "கர்த்தரின்" வார்த்தைகளான புனித பைபிள் ஸ்லோகங்களை உங்களால் இல்லாமல் செய்து விட முடியுமா? செய்வதும் ஆகுமா? சிந்தியுங்கள்.....


....புனித பைபிளின் நல்ல போதனைகளை பார்! படி! நல்ல போதனைகளை இத்தளத்தில் பதிவிடு! என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களே!!உங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள் . கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோ? புனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது? புனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வதில் தவறென்ன? பைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.....
.

Sunday, August 15, 2010

பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகள் புனிதமும் வக்கிரமும்

சர்ச்சின் கவுரவம் பெரியதா, அல்லது உங்களின் மனச்சாட்சி பெரியதா? முடிவு செய்யுங்கள்.
‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் !

இந்தியாவின் கிறித்தவப் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் எண்ணிக்கையில் அறுபது சதவீதத்தை அளிக்கும் கேரளாவில் அண்மையில் வெளிவந்த ஒரு புத்தகம் கிறித்தவ உலகில் ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றது.

“ஆமென் ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு” என்ற அந்த நூல், 33 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்து பின்னர் சபையிலிருந்து விலகிய ஜெஸ்மி என்ற 53 வயது சகோதரியால் எழுதப்பட்டது.

காங்கரகேஷன் ஆஃப் மதர் ஆஃப் கார்மெல் எனும் கன்னியாஸ்திரி சபையில் சகோதரியாகப் பணியாற்றிய ஜெஸ்மி, ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று, கடைசியாக திருச்சூரில் இருக்கும் பிரபலமான விமலா கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். 35 இலட்சம் உறுப்பினர்களுடன் இயங்கும் இந்தியாவின் மிகப்பெரிய, பணக்கார கத்தோலிக்க சர்ச்சான ஸிரோ மலபார் சர்ச்சால்தான் விமலா கல்லூரி நடத்தப்படுகின்றது.

இச்சபையில் இருக்கும் முறைகேடுகளை எதிர்த்துக் குரல் கொடுத்ததால் ஜெஸ்மிக்கு பைத்தியகார பட்டம் சூட்டி தனிமைப்படுத்த நினைத்த தலைமைப் பாதிரியார்களின் சதியை முறியடிக்கும் வண்ணம் அவர் இந்த சுய வரலாற்று நூலை எழுதியிருக்கின்றார்.

"க்ளிக்" செய்து படியுங்கள்.
கிறிஸ்துவத்துக்குள் ஒரு கலக‌க்குரல். "குங்குமம்"


இந்நூலில் சகோதரிகளிடம் நிலவும் ஒரினச்சேர்க்கை, முக்கியமாக தலைமைப் பொறுப்பிலிருக்கும் சகோதரிகள் புதிய இளைய சகோதரிகளைத் தமது ஓரினப் பாலியல் இச்சைக்கு மிரட்டிப் பணியவைப்பது, ஆண் பாதிரியார்களும் புதிய சகோதரிகளைத் தமது அதிகார வலிமையால் பாலியல் வன்முறை செய்வது, இவற்றை எதிர்த்து வரும் குரல்களை சர்ச்சின் கௌரவம்தான் முக்கியமானது என்று புறந்தள்ளுவது என அனைத்தையும், தன் சொந்த அனுவபங்களோடு ஜெஸ்மி பகிர்ந்து கொள்கிறார்.

மேலும் பண விசயங்களில் நடக்கும் முறைகேடுகளையும், ஊழல்களையும் சேர்த்தே அம்பலப்படுத்துகின்றார். பத்திரிகைகள் பலவும் இந்நூலில் உள்ள செக்ஸ் பிரச்சினைகளை மட்டும் செய்தியாக்கி இருக்கின்றன. வெளிவந்த ஒரே மாதத்தில் மூன்று பதிப்புக்களைக் கண்ட இந்நூல் கேரளத்தில் ஒரு பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றது.

ஆனால் இந்த அதிர்ச்சி அலைக்கு முரணாக 2008 அக்டோபர் மாதம் கேரள கிறித்தவ உலகமே பெரும் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. காரணம் 1946ஆம் ஆண்டு மரணமடைந்திருந்த அல்போன்சா என்ற கேரள கன்னியாஸ்திரிக்கு போப்பாண்டவர் புனிதர் என்ற பட்டத்தைக் கொடுத்ததுதான். வாட்டிகனில் வழங்கப்பட்ட இந்த பட்டமளிப்பு விழாவில் கேரளாவிலிருந்து பேராயர்கள், ஆயர்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், பக்தர்கள் எனப் பலரும் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர். கேரள மார்க்சிஸ்டு அரசு தன்னை மதச்சார்பற்ற இடதுசாரி முன்னணி என அழைத்துக் கொள்ளும் அரசு இந்த விழாவிற்கென ஒரு அமைச்சரையே அனுப்பி வைத்ததென்றால் இதன் முக்கியத்துவத்தை அறியலாம். கேரளாவில் கிறித்தவ மக்களின் விகிதம் அதாவது ஓட்டு அதிகமென்பதுதான் மார்க்சிஸ்டுகளின் இந்த ‘முற்போக்கு’ நடவடிக்கை உணர்த்தும் செய்தி.

அல்போன்சாவின் கல்லறை இருக்கும் பரனங்கானம் என்ற ஊர் இன்று அகில இந்திய சுற்றுலாத்தலமாக மாறி விட்டது. கடவுளின் தேசமென்று அழைக்கப்படும் கேரளாவில் முதல் இந்தியக் கிறித்தவர் ஒருவருக்கு கிடைத்திருக்கும் புனிதர் பட்டம் கொண்டாடப்படுவது அதிசயமில்லை.

அல்போன்சா எனும் அந்த எளிய பெண்மணி 1910இல் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து கன்னியாஸ்திரியாக மாறி அதிகமும் கல்விப்பணி புரிந்து பின்னர் வெகுகாலம் நோய்வாய்ப்பட்டு 1946இல் இறக்கின்றார். 1953ஆம் ஆண்டு அல்போன்சாவை ‘தேவனின் சேவகி’ என்று வாட்டிகன் ஏற்கின்றது. கேரளாவில் அவரைப் புனிதராக்கும் முயற்சிகள் தொடங்குகின்றன.

புனிதர் பட்டம் பெற வேண்டுமென்றால் அந்த நபர் இரண்டு அற்புதங்களை செய்திருக்க வேண்டுமாம். அப்படி அற்புதங்கள் செய்ததாக 1984இல் போப் இரண்டாம் ஜான் பால் அறிவித்துவிட்டு 1986 ஆம் ஆண்டு கோட்டயத்திற்கு வந்தபோது அல்போன்சாவை ஆசிர்வதிக்கப்பட்டவர் என அறிவிக்கின்றார். இறுதியில் 2008இல் போப் பதினாறாம் பெனடிக்ட் அல்போன்சாவை புனிதர் என அறிவிக்கின்றார். இதுதான் ஒரு இந்தியர் முதன் முதலாகப் புனிதர் பட்டம் பெற்ற கதை.

இப்படி இந்தப் புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் சம்பந்தப்பட்ட சபையின் பிஷப், ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு செய்து பின்னர் மேல்கமிட்டி அதைப் புலனாய்வு செய்து அதன் பிறகு வாட்டிகன் சோதித்தறிந்து, இரண்டு அற்புதங்களைப் பற்றி ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து உறுதி செய்து, இறுதியில் போப் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். நமது நீதிமன்றங்களில் ஒரு சிவில் வழக்கு பத்தாண்டுகளாக இழுக்கப்படுவதற்கு ஒப்பானது இது என்றாலும், அந்த அளவுக்கு புனிதர் பட்டத்திற்கு மவுசு இருக்கிறது என்பதால்தான் இந்த ஜோடனைகள்.

புனிதர் பட்டம் பெற்ற அல்போன்சாவும், திருச்சபையின் பாலியல் உள்ளிட்ட முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஜெஸ்மியும் ஸிரோ மலபார் சர்ச்சைச் சேர்ந்தவர்கள்தான். சென்ற ஆண்டு மகிழ்ச்சியில் திளைத்த இந்த சர்ச் இந்த ஆண்டு மருண்டு போயிருக்கின்றது.

திருச்சபையின் செய்தித் தொடர்பாளர் அருட்தந்தை பால் தேலக்காட் கூட இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இந்தப் பாலியல் முறைகேடுகள் இருப்பதை ஒத்துக்கொண்டு, அதைச் சரிசெய்ய முடியுமெனவும் கூறியிருக்கிறார்.

இதிலிருந்து திருச்சபையே இதை மூடிமறைக்க முடியவில்லை என்பது தெளிவு. ஆனால் ஜெஸ்மியை மனநோயாளி என முத்திரை குத்த நடந்த முயற்சி குறித்து தேலக்காட் அலட்டிக் கொள்ளவில்லை. அது அவரது மன ஆரோக்கியம் குறித்த பிரச்சினை எனச் சமாளிக்கிறார்.

இதே தேலக்காட் இந்திய கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் தலைவரான 82 வயது கார்டினல் வர்கி விதயாதிலின் சுயசரிதையை எழுதியிருக்கின்றார். அதில் திருச்சபையில் கன்னியாஸ்திரிகள் அச்சத்துடன் வாழ்வதாகவும், பலர் பாதிரியார்களின் எடுபிடி சேவகர்களாகக் காலம் கழிப்பதாகவும் விதயாதில் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயம் திருச்சபையின் கவுரவத்தை விட்டுக்கொடுக்காமல், தப்பு செய்பவர்களின் முயற்சிக்கு சபை ஒருபோதும் உதவாது என்றும் தெரிவித்திருக்கிறார். எல்லாம் திருச்சபையின் முடைநாற்றம் முச்சந்திக்கு வந்தபின்பு தவிர்க்க இயலாமல் தெரிவிக்கப்படும் பாவ மன்னிப்புக்கள்.

தேவனை நம்பும் எளிய மக்கள் தமது தவறுகளை திரைத் தடுப்புக்கு அப்பால் உள்ள பாதிரியார்களிடம் கூறி மன்னிப்பைப் பெற்றுக் கொள்கின்றார்கள். இங்கே ஒரு மனிதனின் தவறு அவனது சுயவிமரிசனம் மற்றும் மற்றவர்களின் விமரிசனத்திற்கு உட்பட்டு திருத்தப்படுவதில்லை.

அதற்கு மாறாக அவனது தவறுகள் பொதுவான காரணங்களினால் மன்னிக்கப்பட்டு, அதாவது தவறை தேவனின் பிரதிநிதியிடம் கூறியதற்காகவே குற்றவாளி என்ற நிலையிலிருந்து விடுவிக்கப்படுகின்றான்.

இம்மை, மறுமை, பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம், சாத்தான்கள், பரிசுத்த ஆவி என்று கற்பனையாகக் கட்டியமைக்கப்பட்ட மதிப்பீடுகள் நிகழ்காலத்தின் நெறிமுறையை மதத்தின் நம்பிக்கை என்ற பெயரால் வடிவமைக்கின்றன.

இந்தக் கற்பனையான விடுவித்தலில் எளிய தவறுகள் செய்யும் சாதாரண மக்களுக்குப் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை.

ஆனால் வார்த்தைக்கு வார்த்தை கடவுள் அமெரிக்காவை ஆசிர்வதிப்பார் என்று பேசும் அமெரிக்க அதிபர்களுக்கு ஈராக்கிலும், ஆப்கானிலும் அப்பாவி மக்கள் அமெரிக்கத் துருப்புக்களால் கொல்லப்படுவது தெரியும். போபாலில் பல ஆயிரம் பேரைக் கொன்ற ஆண்டர்சனோ, பங்குதாரர்களை ஏமாற்றிய என்ரானின் தலைவரோ தேவாலயம் சென்று பாவமன்னிப்பு பெறுவார்களா என்ன?

தொழில் வேறு மதம் வேறு என்பதோடு, அவர்களைப் பொறுத்தவரை மதம் என்பது மக்களை நயம்பட ஏமாற்றுவதற்கான தந்திரம்தான்.

அமெரிக்காவில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிரியார்கள் சிறுவர்களிடம் பாலியல் முறைகேடுகள் செய்ததாக வழக்கு நடக்கின்றது. இதில் பாஸ்டனைச் சேர்ந்த பாதிரியார் ஒருவருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு எட்டாண்டு சிறைத் தண்டனையே கிடைத்திருக்கின்றது. இந்தப் பாலியல் முறைகேடுகளுக்காக மட்டும் அமெரிக்க திருச்சபை சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயை அபராதமாகவும், நிவாரணமாகவும் கட்டியிருக்கின்றது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போப் இதற்காகவே மன்னிப்பு கேட்டிருக்கிறார். அமெரிக்க கிறித்தவ சபைகளில் நிலவும் இந்த ‘ஒழுக்கம்’ எல்லா நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றது என்பதைத் தனியாக விளக்கத் தேவையில்லை.

ஜெஸ்மி தனது சுய வரலாற்றில் ஒரு பாதிரியார் எல்லா கன்னியா ஸ்திரிகளையும் கட்டித் தழுவி முத்தம் கொடுப்பதைக் குறிப்பிட்டு, தான் மட்டும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாகவும் அதற்கு அந்தப் பாதிரியார் முத்தம் கொடுப்பதை நியாயப்படுத்தும் வாசகத்தை பைபிளிலிருந்து படித்துக் காண்பித்ததாகத் தெரிவிக்கின்றார்.

பச்சையான பாலியல் இச்சைகளையும், வன்முறைகளையும் கூட பைபிளின் பெயரால் நியாயப்படுத்த முடியும் என்றால் கன்யாஸ்திரிகளுக்கு விடுதலை என்பது எப்படி சாத்தியம்?

மற்றவர்களின் பாவங்களுக்கு தேவனின் பிரதிநிதியாய் இருந்து மன்னிப்பை வழங்கும் ஒரு பாதிரியார் தனது பாவம் என்பது தேவனால் அங்கீகரிக்கப்பட்டது என்று காட்ட முயல்வதன் மூலம் கடவுள் என்பவரே
கற்பனையானவர் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்கின்றார்.

ஏசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும் ஒரு ஏழை அல்ல; ஏசுவின் தரகர்களாக வலம் வந்து பாவ புண்ணியங்களைத் தீர்மானிக்கும் இந்தப் பாதிரியார்கள்தான் அபாயகரமானவர்கள். இந்த அபாயம் பக்தர்களின் கேள்விக்கிடமற்ற நம்பிக்கை தரும் துணிச்சலிலிருந்து எழுகின்றது.

ரோமாபுரிப் பேரரசின் அடிமைகளை விடுதலை செய்வதற்கு முயன்ற ஏசுநாதரின் பெருமை அவர் செய்த அற்புதங்களின் பெயரால்தான் வியந்தோதப்படுகின்றது. இன்றும் தினகரன் முதல் பல நற்செய்தியாளர்களும், சாய்பாபா, கல்கி, பிரேமானந்தா முதலான இந்துச் சாமியார்களும் அற்புதங்கள் மூலம்தான் தமது ஆன்மீகச் சந்தையை உருவாக்குகின்றனர்.

ஏசுநாதர் முடவர்களை நடக்க வைத்து, குருடர்களைப் பார்க்க வைத்து, தொழுநோயாளிகளைக் குணப்படுத்தி, அப்பங்களைப் பல்லாயிரமாகப் பெருக வைத்து அற்புதங்களைச் செய்தார் என்பதுதான் இன்றும் கிறித்தவத்தின் அடிப்படை நம்பிக்கையாக இருக்கின்றது.

உண்மையில் ஏசுநாதர் அவர் காலத்தில் இப்படி சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் மேல் அன்பு காட்டினார் என்பதைத் தாண்டி அவர் எந்த அற்புதங்களும் செய்யவில்லை. அப்படி யாரும் செய்யவும் முடியாது.

இன்றைக்கு கிறித்தவ நற்செய்திக் கூட்டங்களில் அந்த அற்புதங்களுக்கான சாட்சிகள் செட்டப் செய்யப்பட்டு மேடையேற்றப்படுகின்றனர்.

இப்படித்தான் மதத்தின் மூடநம்பிக்கை நசிந்து போகாமல் காப்பாற்றப்படுகின்றது.

அந்த அற்புதங்கள் உண்மை என்றால் இன்று கிறித்தவ மிசினரிகள் நடத்தும் எண்ணிலடங்கா மருத்துவமனைகளுக்கு என்ன காரணம்?

 "க்ளிக்" செய்து படியுங்கள்.
டாக்ட‌ரிட‌ம் செல்லாதீர்க‌ள் வியாதியுண்டானால்


அதற்குப்பதில் தேவ செய்தியாளர்களை வைத்து எல்லா நோயாளிகளையும் சடுதியில் குணமாக்கி விடலாமே? மேலும் ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்புப் போரினால் உறுப்புக்களை இழக்கும் ஈராக், ஆப்கான் நாடுகளைச் சேர்ந்த அப்பாவிகளுக்கும் அந்த உறுப்புக்களை மீண்டும் தருவிக்கலாமே?

இப்படி கலப்படமில்லாத பொய்மையின் வலிமை கொண்டுதான் மதங்களின் சிறப்புக்கள் முழு முதல் உண்மை போல இறைக்கப்படுகின்றன. 

இதையே நவீன இந்து சமய சாமியார்கள் யோகம், தியானம் என்று எல்லா வளங்களையும் தரும் உடனடி லாட்டரிகளைப் போல அள்ளித் தெளித்து தமது ஆன்மீக சாம்ராஜ்ஜியங்களை விரிவாக்குகின்றனர்.

அல்போன்சாவின் புனிதர் பட்டத்தின் கதையைக் கூட எடுத்துக் கொள்வோம். அவர் இறந்த பிறகு அவரது கல்லறையில் பிரார்த்தனை செய்த இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடந்திருக்கின்றதாம். அதில் ஒரு கேரள தம்பதியினர் பிறவியிலேயே ஊனமுற்ற தமது மகன் அல்போன்சாவின் அருளால் ஊனம் நீங்கி நடப்பதைத் தெரிவித்தார்களாம். இதை ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து உண்மையென உறுதி செய்து வாட்டிகனுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு ஏற்கப்பட்டதாம்.

இந்த மருத்துவர் குழுவில் இருக்கும் மருத்துவர்களும் கேள்விக்கிடமற்ற நம்பிக்கை கொண்டு திருச்சபையை மதிக்கும் பக்தர்கள் என்பதுதான் உண்மை.

அன்னை தெரசாவுக்கும் இப்படித்தான் இரண்டு அற்புதங்கள் ஜோடிக்கப்பட்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கிறித்தவ மதத்திற்காகத் தொண்டூழியம் செய்பவர்களை அவர்கள் மட்டுமின்றி யாரும் ஏன் போப்பும் கூட செய்ய முடியாத அற்புதங்கள் எனும் மோசடி கொண்டுதான் அளவிட வேண்டுமா?

அல்போன்சா தனது வாழ்வை ஆசிரியப் பணிக்கு அர்ப்பணித்து விட்டு வெகுநாட்கள் நோய்வாய்ப்பட்டு இளம் வயதிலேயே இறந்து விட்டார். இதைத் தவிர அந்த அப்பாவி கன்னியாஸ்திரியின் கல்லறைக்குச் சென்று பிரார்த்தித்தால் அற்புதங்கள் நிகழும் என்று ஜோடிக்க வேண்டிய அவசியமென்ன?

மேற்குலகில் கிறித்தவத்தின் நம்பிக்கை வெகுவாக வடிந்திருக்கும் நிலையில் மூன்றாம் உலக நாடுகளிலிருக்கும் மந்தைகளைத்தான் தேவனின் செய்தியால் மாற்ற முடியும் என்ற ஒரே காரணத்தால்தான் அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது.

டெண்டுல்கர் சதமடித்தாலோ, ரஜினி பஞ்ச் டயலாக் பேசினாலோ முழு நாடே கொண்டாடும் சூழலில் ஒரு முதல் இந்தியருக்கு அளிக்கப்பட்ட புனிதர் பட்டமும் அப்படித்தான் கொண்டாடப்படுகின்றது.

மேலும் பாதிரியார்களையும், கன்னியாஸ்திரிகளையும் அள்ளி வழங்கும் கேரளத்தின் சேவையைக் கணக்கில் கொண்டும் இந்தப் புனித மோசடி கச்சிதமாக நடந்திருக்கின்றது.

இலட்சக்கணக்கான பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் வாழும் உலகில் இப்படி ஒரு சிலர் மட்டும்தான் அற்புதங்களைச் செய்ய முடியுமென்றால் மற்றவர்களெல்லாம் பாவிகளா இல்லை சாத்தானின் அவதாரங்களா?

நோய்வாய்ப்பட்டு பலமாதங்கள் துயருற்ற அல்போன்சாவை அவர் காலத்திய பாதிரிகள் அற்புதம் செய்து குணமாக்கியிருக்கலாமே, என் அப்படி நடக்கவில்லை?

ஆக மதநம்பிக்கையைப் பரப்புவதிலேயே இத்தகைய பச்சையான மோசடிகளும் ஊழலும் இருக்கும்போது, கன்னியாஸ்திரிகள் மீதான பாலியல் வன்முறையை மட்டும் தனிச்சிறப்பான மோசடி என்று எப்படிக் கூற முடியும்?

எனவேதான் திருச்சபையில் இருக்கும் ஆன்மீக ஊழல்களும், லவுதீக ஊழல்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை வலியுறுத்திச் சொல்கின்றோம்.

அற்புதங்கள் என்பது எப்படியும் நிகழாத ஒன்று என உறுதியாகத் தெரிந்திருக்கும் ஒரு பாதிரி, சபையில் சேரும் இளம் கன்னியாஸ்திரியை பாலியல் வன்முறை செய்வது ஒன்றும் தெய்வக் குற்றமில்லை என ஏன் நினைக்க மாட்டான்? தெய்வமே இல்லை என்றாகும்போது தெய்வக்குற்றம் மட்டும் எப்படி இருக்க முடியும்?

ஜெஸ்மி தனது முப்பது வருட கன்னியாஸ்திரி வாழ்க்கையைத் துறந்து விட்டு, அதன் காரணங்களையும் வெளி உலகிற்கு தெரிவித்து விட்டார். இல்லையேல் அவர் ஒரு மனநோயாளி என ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பார். இப்போதும் கூட அவர் கிறித்தவ மதத்திலிருந்து வெளி@யறவில்லை. இவரது பிரச்சினை கிளப்பிய புயலில் அரண்டுபோன திருச்சபையும் இந்தப் பாலியல் முறைகேடுகளைச் சரி செய்யும் நுட்பத்தை அமல்படுத்தப் போவதாகப் பேசுகின்றது. ஏற்கனெவே சகோதரி அபயா கொலை வழக்கில் 2 பாதிரியார்களும் 1 கன்னியாஸ்திரியும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மூத்த கன்னியாஸ்திரிகளின் கொடுமை தாங்காமல் சகோதரி அனூப் மேரி தற்கொலை செய்து கொண்டார். இவையெல்லாம் கேரளாவில் அம்பலத்திற்கு வந்த திருச்சபையின் குற்றங்கள்.

மதம் மற்றும் திருச்சபையின் முறைப்படியே ஆண் பாதிரிகளுக்கு உரிய தகுதியும், பதவியும் பெண் கன்னியாஸ்திரிகளுக்கு கிடையாது. இப்படி வழக்கத்திலேயே ஆணாதிக்கம் கோலோச்சும் ஒரு நிறுவனத்தில் சேரும் இளம்பெண்ணுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்?

ஜெஸ்மி தன்மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை குறித்து ஒரு மதர் சுப்பீரியரிடம் முறையிட்ட போது அந்த தலைமைச் சகோதரி சொன்னாராம் “இந்தக் குற்றச்சாட்டை விட சர்ச்சின் கவுரவம் முக்கியமானது என்பதால், இவற்றைக் கண்டுகொள்ளாமல் கர்த்தருக்கு பணியாற்றுவதுதான் முக்கியம்”

புதிய கலாச்சாரம் பத்திரிகையை பல இளம் பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் தவறாமல் படிக்கிறார்கள் என்ற நல்ல விசயம் எங்களுக்குத் தெரியும் என்பதால், அவர்களிடம் ஒரு கேள்வியை உங்கள் மதத்தால் சாத்தானென்று கருதப்படுகிறோம் என்றாலும் கேட்க விரும்புகின்றோம்.

“நீங்கள் எப்போது சபையை விட்டு வெளியேறி உண்மையான மக்கள் பணி ஆற்றப் போகின்றீர்கள்?”


சர்ச்சின் கவுரவம் பெரியதா, அல்லது உங்களின் மனச்சாட்சி பெரியதா? முடிவு செய்யுங்கள்.

நன்றி-புதிய கலாச்சாரம், மே’2009

ஆதாரம். http://www.vinavu.com/2009/06/29/amen/

தொடர்புடைய பதிவுகள்.
"க்ளிக்" செய்து படியுங்கள்.
1.ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.
…………………………………..
ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வொரு வசனங்களையும் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் – யாரிடம் வேண்டுமானாலும் படித்துக்காட்டலாம், எப்பொழுது வேண்டுமானாலும் அதன் கருத்துக்களை விளக்கலாம் என்பது ஒரு இறை வேதத்தினுடைய பொது நியதி. இது எல்லா வேதங்களுக்கும் இருக்கப்படவேண்டிய ஒரு பொதுவான தகுதியும் கூட.

புனித பைபிளில் வரும் இந்தவசனங்களை எவராவது தன் குடும்பத்தோடு – குறிப்பாகத் தன் தாய், தந்தை, மகன், மகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து படிக்க இயலுமா? சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே! விபச்சார சகோதரிகள் பற்றி சொல்லப்படும் இந்த கதையின் வர்ணனையின் மூலம் கர்த்தர் இவ்வுலக மக்களுக்கு என்ன சொல்ல வருகின்றார்? இதனால் என்ன பயன்?
"க்ளிக்" செய்து படியுங்கள்.
2.வேசிகள் அடங்காத‌ காமத்துடன்
....................................................
ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.

"க்ளிக்" செய்து படியுங்கள்.
3.கிறிஸ்துவ போலிமாயைக்கு சவால்?
..................
4.கொடுமைக்கார கன்னியாஸ்திரிகளின் துர்நடத்தைகள்
..............
5.கர்த்தரே! பாவிகளான பாதிரிகளை மன்னியாதேயும்!!
.....................
6. கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி
.................
இயேசு ஏசு கர்த்தர் கிறிஸ்தவம் பைபிள்

4 comments:

 1. இவைகள் நியாயப்படுத்தப்படும் நாள் வெகு தொலைவிலில்லை. அல்லாஹ் அதனை வெகுவிரைவில் வெளிக்கொனர்வான்.

  ReplyDelete
 2. http://changesdo.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

  ReplyDelete
 3. //நோய்வாய்ப்பட்டு பலமாதங்கள் துயருற்ற அல்போன்சாவை அவர் காலத்திய பாதிரிகள் அற்புதம் செய்து குணமாக்கியிருக்கலாமே, என் அப்படி நடக்கவில்லை?//

  ReplyDelete
 4. ஜெஸ்மி ஏன் மடம் விட்டு வெளியேற 30 வருடம் காத்திருந்தார்?

  ReplyDelete